Tuesday, February 8, 2011

கட்த்ரோட் பொலிடீஷியன்ஸ் PDF அச்சிடுக மின்-அஞ்சல்
புதன்கிழமை, 09 பிப்ரவரி 2011 00:12

என்னடா இது தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதே என்று பார்க்காதீர்கள்.. இந்தத் தலைப்பு சவுக்கு வைத்தது அல்ல. அமைச்சராக இருக்கும் அக்கா பூங்கோதை அஞ்சா நெஞ்சன் அழகிரியைப் பார்த்துச் சொன்னது.   யார் கட்த்ரோட் பொலிடீஷியன்? அதில் தான் கடும் போட்டி நடக்கிறது.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை எனும் அளவுக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விளையாட்டுகளில் நாம் சளைத்தவர்களா என்றால், நாமும் சளைத்தவர்கள் கிடையாது. ஒருவரை ஒருவர் கவிழ்த்து, அதன் மூலம் எப்படி முன்னேறலாம் என்பதில் நாம் அனைவருமே போட்டி போடுகிறோம் தான்.   நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில், சமயம் கிடைத்தால், நமக்கு பிடிக்காத நபரை உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதில்லையா ?

அது ஒரு வகை அரசியல். ஆனால் நம்மைப் போன்றவர்கள் செய்யும் இந்த அரசியல், நம்மோடும், நமது அலுவலகத்தோடும் முடிந்து விடும்.

ஆனால் நிஜ அரசியல்வாதிகள் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்தும், நமது வாழ்வை பாதிப்பதாலும், பார்த்து ரசிக்க சுவையாக இருப்பதாலும், நாம் அதைப்பற்றி பேசியும், எழுதியும் வருகிறோம்.

கருணாநிதியின் புது தில்லி விசிட்டின் போது நடந்த விவகாரங்கள், அதிரடித் திருப்பங்கள் மிகுந்த ஒரு புதினத்தை விட விறுவிறுப்பாக இருந்தன.
 2451624538_337648c0cd_o
கருணாநிதி தன்னை எப்போதும் மிகப் பெரிய அரசியல் சாணக்கியனாக கருதிக் கொள்பவர். அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு.   ஒரு சிறிய கருத்துக் கணிப்புக்காக ஆட்களை அனுப்பி, தினகரன் ஊழியர்களை எரித்துக் கொல்லும் அளவுக்கு, ‘நிதானம்’ படைத்த தனது மகன் அழகிரியை சமாளித்து பெட்டிப் பாம்பாக அடக்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பல்வேறு பிளவுகளையும், பல்வேறு சோதனைகளையும் சந்தித்த திமுகவுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற ஒரு பெரிய சோதனை வந்ததேயில்லை.   காற்றில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கும் அலைக்கற்றையைப் போலவே, இந்த அலைக்கற்றையும், கருணாநிதியை அலையாய் அலைய வைக்கிறது. எம்.ஜி.ஆர், வைகோ பிரிவுகளை விட, ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுகவை கடுமையாக பாதித்திருக்கிறது.

இந்தப் பின்னணியிலேயே, திமுக காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இந்த விவகாரங்களுக்குள் செல்லும் முன், யுபிஏ 1 அரசாங்கத்தில் கருணாநிதியின் நிலை என்ன என்பதை சற்று திரும்பிப் பாருங்கள்.
 ARaja_20101114
2004 தேர்தலில் திமுக பெற்ற 16 எம்பிக்கள் கருணாநிதியை சர்வ அதிகாரம் படைத்த நபராக யுபிஏ 1 அரசாங்கத்தில் உருவாக்கின.   அந்த 16 எம்பிக்கள், மத்திய அரசின் சுவாசமாகவே அமைந்ததால், சோனியா கருணாநிதியை மிகுந்த மரியாதையோடு நடத்தினார். 2004ல் கருணாநிதி டெல்லிக்கு சென்ற போது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த கருணாநிதியை, சோனியா நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை கோரினார்.

கருணாநிதி தான் கெஞ்சினால் மிஞ்சுபவர் ஆயிற்றே…. மூன்று கேபினெட் மந்திரி பதவிகள், மூன்று இணை அமைச்சர்கள், அதுவும் இலாக்காக்கள், நாங்கள் கேட்பதைத் தான் தரவேண்டும் என்று கூறுகிறார்.

அதற்கும் காங்கிரஸ் ஒத்துக் கொள்கிறது. பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு மற்ற கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், இலாக்காக்களை மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடி வந்ததும், கருணாநிதி வெகுண்டெழுந்து, அரசியல் மரபை மீறி, எழுத்துப் பூர்வமாக கொடுக்கப் பட்ட, இலாக்கா குறித்த உத்தரவாதங்களை பத்திரிக்கையாளரகளை அழைத்து வெளியிடுகிறார். வேறு வழியின்றி, காங்கிரஸ் கட்சி பணிந்து, கேட்ட இலாக்காக்களை அளிக்கிறது.
 soniagandhi
இப்படித் தான், கப்பல் போக்குவரத்து, வனம், சுற்றுச் சூழல், தொலைத் தொடர்பு போன்ற பசையான இலாக்காக்களை பெறுகிறது திமுக…

இன்று.. ?

இரண்டாவது யுபிஏ அரசாங்கம் உருவாகும் போது, நிலைமை தலைகீழாகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட, இம்முறை அதிக வாக்குகள் கிடைத்ததால், அக்கட்சிக்கு வழக்கமாக இருக்கும் அகம்பாவம் மீண்டும் தலை தூக்குகிறது.

இந்த முறை, தள்ளு வண்டியில் டெல்லி சென்ற கருணாநிதியை காக்க வைத்து அலைகழிக்கிறார் சோனியா…. கருணாநிதியும், தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம், சொக்கத் தங்கம் சோனியா, தியாகத் திருவிளக்கு, கார்பரேஷன் தெருவிளக்கு என்றெல்லாம் பாராட்டு மழைகளை பொழிந்தாலும், மத்திய உளவுத் துறை மூலமாக, கருணாநிதி சோனியாவை கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், என்னென்னவெல்லாம் சொல்லி கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் என்பதை நன்கு அறிந்த சோனியா, இந்த பாராட்டுகளை வஞ்சப் புகழ்ச்சியாகவே எடுத்துக் கொண்டார்.

கருணாநிதி தொலைபேசியைத் தான் ஒட்டுக் கேட்பார். சோனியா, கோபாலபுரத்தையே ஒட்டுக் கேட்கும் வசதி படைத்தவர் அல்லவா ?

தேர்தல் முடிந்தவுடன், தன் சுயரூபத்தை காட்டுகிறார் சோனியா…. தள்ளாத வயதில், தள்ளு வண்டியில் போன கருணாநிதியை, சந்தித்து விட்டு அமைச்சரவை பற்றி எதுவாக இருந்தாலும், பிரணாப்பிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.   பிரணாப், நீங்க கேக்கறதெல்லாம் குடுக்க முடியாது, நாங்க குடுக்கறத வாங்கிக்குங்க என்ற கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியை எதிருக்கு எதிர் நின்று தேர்தல் களத்தில் சந்தித்த கட்சிகளெல்லாம், போட்டி போட்டுக் கொண்டு, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர விரும்பியது காங்கிரசின் ஆணவத்திற்கு எண்ணை ஊற்றியது.
 4473461162_6ba903d5f2_b
நடக்க முடியாவிட்டாலும், குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தார் கருணாநிதி. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தனது எதிர்ப்பை வெளிப்படையாக காட்டினார். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.   ஒன்றும் நடக்கவில்லை.

வேறு வழியின்றி, மூட்டையைக் கட்டிக் கொண்டு, திரும்பினார். 2009 யுபிஏ அரசாங்கம் தொடங்கியதிலிருந்தே, கருணாநிதிக்கு சனி திசை தொடங்கியது.

அழகிரிக்கு இங்கிலீஷ் தெரியவில்லை, பாராளுமன்றத்திற்கு செல்வதில்லை என்பதில் தொடங்கி, To put it in English DMK became the laughing stock.   காங்கிரஸ் கட்சி, திமுகவை வேண்டாத விருந்தாளியாவே கருதத் தொடங்கியது.

அமைச்சரவை உருவாக்கத்தின் போது, இந்திய ஜனநாயகத்தைக் காத்த மாதரசி நீரா ராடியா, எப்படி அமைச்சர் பதவிகளை உருவாக்கினார் என்பதும், திமுக எப்படி தொலைத் தொடர்புத் துறையை மிரட்டி, கெஞ்சிப் பெற்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

மீண்டும், போன அரசாங்கத்தில் சம்பாதித்தது போல, பெரிய தொகைகளை சம்பாதித்து, தமிழகத்தில் மிச்சம் மீதி உள்ள பகுதிகளை வளைத்து போடலாம் என்று கருணாநிதி குடும்பத்தினர் போட்ட திட்டம், இரண்டாவது முறை நிறைவேறவில்லை.

கிராமங்களில், வண்டி மாடுகளுக்கு லாடம் அடிக்கையில், மாட்டின் நான்கு கால்களையும் கட்டிப் போட்டு, வாயையும் இறுக்கிக் கட்டி வைத்து விட்டு லாடம் அடிப்பது போல, திமுக அமைச்சர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டனர். முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும், ‘எம்பவர்ட் க்ரூப் ஆப் மினிஸ்டர்ஸ்’ என்ற குழுவே முடிவு செய்யும் என்று அறிவிக்கப் பட்டு அது முழுமையாக அமல்படுத்தப் பட்டது. அழகிரி, ரசாயனம் மற்றும் உரத்துறையில் ஒரு பின்னு பின்னலாம் என்று போட்ட திட்டம், புஸ்வாணமாகிப் போனது. இதனால் கோபித்துக் கொண்ட அவர், டெல்லிக்குச் செல்வதை தவிர்த்தார்.

இப்படி நெருக்கடிக்கு உள்ளான திமுகவினர், சரி வாய்ப்பு கிடைக்கும் போது, பெரிய தொகையாக அடிக்கலாம் என்று சமயம் பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்த சமயம் வரவேயில்லை. ஆனால், அதற்கு பதிலாக சோதனை மேல் சோதனை என்று, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முதல் சோதனை, நடந்தது அக்டோபர் 2009ல்.

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். கேபினட் அமைச்சர், தொலைத் தொடர்புத் துறையை பிடிவாதமாக கேட்டுப் பெற்றவர். அவர் அலுவலகத்தில், சிபிஐ சோதனை…. அக்டோபர் 2009ல் சிபிஐ தனது முதல் சோதனைகளை நடத்தியது. ட்ராய் அலுவலகம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் சன்ச்சார் பவன் ஆகிய இடங்களில் நடத்திய சோதனைகளில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.
 07IN_SANCHAR_BHAWAN_140607e
தனது அமைச்சச்கத்தில் நடந்த சோதனையை கண்ட ஆண்டிமுத்து ராசா கோபமடைந்து, திமுக தலைவரிடம் சொல்லியிருக்க வேண்டும். ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனால், இது திருடனுக்கு கொட்டப் பட்ட தேளல்லவா ?

அமைதியாக இருந்தார்கள் ஆண்டிமுத்து ராசாவும், முத்துவேல் கருணாநிதியும்.   என்ன இது போல ராசாவில் அமைச்சகத்தில் சோதனை நடந்திருக்கிறதே என்ற கேள்விக்கு, எப்ஐஆரில் யாருடைய பெயரும் இல்லையே என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.

இதற்குப் பிறகு சிறிது சிறிதாக காங்கிரஸ் திமுக உறவில் பற்பல உரசல்கள் ஏற்படத் தொடங்கின. தான் கூட்டணியில் இருக்கும் ஒரு கூட்டணிக் கட்சியின் ஒரு தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தாறுமாறாக திமுகவை விமர்சித்து வருவதையும், காங்கிரஸ் போட்ட பிச்சையில் தான் திமுக ஆட்சி நடக்கிறது என்பதையும் பல்வேறு இடங்களில் பேசி வந்தார். ஆனால், திமுக தலைமையோ, இது எதுவுமே காதில் விழாதது போல நடந்து கொண்டது. இருந்தாலும் எரிச்சல் இருக்கும் இல்லையா…. ? அந்த எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். உடனே, கருணாநிதியின் கூஜா, தங்கபாலு, தலைமையின் அனுமதி இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டியளிப்பார்.
 evks_elangovan
சரி, இளங்கோவனை அடக்கி வைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தால், அன்று மாலையே, இளங்கோவன் முன்பை விட காட்டமாக பேட்டியளிப்பார்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸின் தொல்லை எல்லை மீறிப் போனதை உணர்ந்த கருணாநிதி, திமுகவின் ‘தலித் பிரிவு’ தலைவரான தொல்.திருமாவளவனை விட்டு காங்கிரசை தாக்கி அறிக்கை விடச் சொன்னார். திருமாவும் கொடுத்த காசை விட அதிகமாக கூவத் தொடங்கினார். இது காங்கிரஸ் விடுதலைச்சிறுத்தைகள் மோதலாக உருவாகத் தொடங்க, இறுதியாக திருமாவளவன், சோனியாவின் பொற்பாதங்களில் சரணாகதி அடைந்தார். கருணாநிதியின் இந்தத் தந்திரங்களையெல்லாம் நன்கு அறிந்த காங்கிரஸ் நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியை திருப்திப் படுத்தினால் தான் சாபவிமோசனம் என்ற நிலைக்கு தள்ளப் பட்ட கருணாநிதி, தனது காங்கிரஸ் விசுவாசத்தை சீமான் போன்றோரை கைது செய்ததன் மூலம் காண்பித்துக் கொண்டார்.

ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் இறுமாப்பும் திமிரும், சோனியா காந்தி கடந்த அக்டோபர் மாதம், திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது தெளிவாகத் தெரிந்தது. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக சென்னை வந்த சோனியா, கருணாநிதியை சந்திக்க விரும்பாமல், நேரடியாக திருச்சி செல்ல உத்தேசித்த போது, சோனியா பார்க்காமல் போனால், தனக்கு அவமானமாகப் போய் விடும் என்று உத்தேசித்த கருணாநிதி, விமானநிலையத்திலேயே அவசர அவசரமாக சோனியாவை சந்தித்து, காங்கிரஸ் திமுக உறவு திருப்தி கரமாக இருப்பதாக காண்பித்துக் கொண்டார்.
 sonia_airport
அதற்குப் பிறகு திருச்சியில் பேசிய, சோனியா, கருணாநிதியைப் பற்றி ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல, மத்திய அரசு தரும் நிதியால் தான் மாநில அரசுகள் திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது என்று பேசினார். சோனியாவும் சரி, கருணாநிதியும் சரி, தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்வதில்லை. மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கே திட்டங்களை உருவாக்கி அளிக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இதற்குப் பிறகுதான் கச்சேரி சூடு பிடிக்கிறது.

நவம்பர் முதல் வாரத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிரடி ப்ளானுக்கு திமுக இரையாகியது.   மத்தியக் கணக்காயரின் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான அறிக்கை நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியானது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. அதற்கு பதிலாக, திமுகவின் கையை முறுக்குவதற்காக, காங்கிரஸ் அனைத்து ஊடகங்களுக்கும் ஒரே நாளில் ‘லீக்’ செய்கிறது. 2ஜி ஏலத்தில் மொத்த இழப்பீடு 1,76,379 கோடி என்ற தொகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.   இந்த அறிக்கை வெளியாகி ஏற்படுத்திய அதிர்ச்சிகள், திமுகவை நிலைகுலையச் செய்கிறது. நாடு முழுவதும் பெரும் விவாதங்கள் கிளம்புகின்றன.

இந்த அறிக்கையை ஊடகங்கள் மூலமாக வெளியிடச் செய்ததே, காங்கிரஸ் கட்சியின் மிகச் சிறந்த தந்திரம்.   இந்த அதிர்சியில் இருந்து கருணாநிதியும், திமுகவும் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி… நீரா ராடியாவின் உரையாடல்கள் ‘ஓபன்‘ வார இதழிலும், ‘அவுட்லுக்‘ வார இதழிலும் வெளியாகின்றன. ஆண்டிமுத்து ராசா எப்படி தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்கு பகீரதப் பிரயத்தனங்களைச் செய்தார் என்பதும், கனிமொழி எப்படி அமைச்சரவையில் ராசாவை இடம் பெறச் செய்ய முயற்சி செய்தார் என்பதும் விவாத அரங்குக்கு வருகிறது.

இந்த நிலையில், ஆ.ராசாவும், அவரது இப்போதைய தொழில் கூட்டாளியும், நாளைய ஜெயில் கூட்டாளியுமான காமராஜ் மற்ற சிலரோடு சேர்ந்து, ராசாவை காப்பாற்ற கடும் முயற்சிகள் எடுக்கிறார்கள். ‘ஊடகப் பேரவை‘ என்ற இறந்த அமைப்புக்கு உயிரூட்டி ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கூட்டம் நடத்தி கூவினர்.

ஆனால், ராசாவை பதவி விலகச் செய்ய, கோரிக்கைகள் வலுவடைந்து வந்தது.
 4638999938_403c3bfc3f
இதற்குப் பிறகு, இனி காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்த திமுக, வேறு வழியின்றி, ஆண்டிமுத்து ராசாவை பதவி விலகச் செய்கிறது.

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, ராசாவை காப்பாற்ற, திமுகவினர், தமிழகமெங்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்தக் கூட்டங்களில், ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு 75,000 பெற்றுக் கொண்டு, ‘லொடுக்குப் பாண்டி‘ என்கிற சுப.வீரபாண்டி ராசா தலித் என்பதால் குறி வைக்கிறார்கள் என்று பேசினார்.

கருணாநிதி ராசாவை தகத்தகாய கதிரவன் என்று பாராட்டினார்.   குஞ்சாமணி என்கிற வீரமணி ‘மாண்புமிகு‘ போனால் என்ன, ‘மானமிகு‘ இருக்கிறது என்று ஓலமிட்டார்.

அடுத்து என்ன என்று தேசமே ஆவலாக இருந்த போதுதான், சிபிஐ சோதனைகள் நடைபெற்றன.

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.

Thursday, November 18, 2010

இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்!!

இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்!!

2002-ல் இந்தியா இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் இறுதியாட்டத்தில் தோல்வியின் விளிம்பின் இருந்து வென்றபோது அன்று வீதியில் திரிந்து "ஐ லவ் இந்தியா" என்று போவோர் வருவோரிடம் எல்லாம் கத்தினேன்.

இந்தியா 1998-ல் அமெரிக்க செயற்கைகோள்களை ஏமாற்றிவிட்டு புத்திசாலித்தனமாக தன் இரண்டாவது அனுகுண்டு சோதனையை நடத்திய போது வாரக்கணக்கில் நண்பர்களிடம் பெருமை அடித்துகொண்டிருந்தேன்.
இதைப்போல எத்தனனயோ சம்பவங்கள்....

ஆனால் இன்று?

முட்டாளாய் இருந்திருந்தாலாவது, ராஜபக்க்ஷே மேல் சாபமிட்டு கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சூண்டு சிந்திக்க தெரிகிறதே.
இன்று ஈழதமிழர் படும் அத்துனை துன்பத்திற்கும் நான் பிறந்த நான் போற்றிய இந்தியா தான் வேறு எவரும் இல்லை என்ற நிலைமையில் நான் எங்கே போய் என் நாட்டுப்பற்றை வீசுவது.

இன்று அபிஷேக் சிங்வி மற்றும் சுதர்சனம் சொன்னார்கள். அங்கே மக்கள் கொல்லபடுவதற்கு கவலை மட்டும் தான் தெரிவிக்க முடியுமாம். வேறு ஒன்றும் செய்ய இயலாதாம்.

இதை 5 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா அவங்க இப்போது நிம்மதியாக் இருந்திருப்பாய்ங்களேயா. இப்படி திட்டம் போட்டு கொன்னுட்டிங்களே..

ஐந்து வருட வராலாறை படித்தால் தான் தெரிகிறது சோனியா ஏன் போனமுறை(2004) ஆட்சிக்கு அலைபாய்ந்தார் என்று.

2004 ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் சோனியா பிரதாமவதற்கு சிக்கல் நேர்ந்தது. கடைசிநேரத்தில் பிரதமாராக அறிவிக்க பட்டது நாம் எல்லோருக்கு தெரியும்.
ஆனால் அதேநேரம் ஈழதமிழர்களுக்கு புதைகுழி தோண்ட சோனியா முதல் பிடி மண்ணை அள்ளியது எவ்வளவு பேருக்கு தெரியும்?

மன்மோகன் சிங் பிரதமரென தீர்மானிக்கப்பட்டது கூட கடைசி நேரத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே இரண்டு முக்கிய பதவிகளை சோனியா தீர்மானித்து விட்டார்.

ஒன்று - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இரண்டு - பிரதமரின் சிறப்பு ஆலோசகர் உள்நாட்டு பாதுகாப்பு.

முதல் பதவிக்கு அமர்த்தபட்டவர் J.N. தீக்க்ஷித். இந்திய அமைதி(?)படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூட்டிவிட்டதில் இவரின் பங்கு ஜெயவர்த்தனேவுக்கு நிகரானது என்று ஈழத்தை படித்த அனைவருக்கும் தெரியும்.

இரண்டாவது பதவிக்கு, 1992-ல் ஓய்வு பெற்று பன்னிரண்டு வருடம் ஈசி சேரில் அமர்ந்து ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருந்த எழுபது வயது இளைஞரான M.K. நாராயணன் அமர்த்தபட்டார்.
ஈழவிவகாரத்தில் 1987 முதல் 1990 இவர் செய்த குழப்பம் அதிகாரவர்க்க மேல்மட்டத்தில் மிக பிரசித்தம்.

ஆகவே இப்படியாக , இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கொலைகளத்திற்கான திட்டத்தை ஐந்து வருடத்திற்கு முன்னமே நம் பாரதத்தின் பெருமைக்குரிய இரவல் அன்னை வெற்றிகரமாக அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இன்று தீவுத்திடலில் முழங்குகிறார், நாங்கள் தமிழருக்கு சம உரிமை கிடைக்க பாடுபடுவோம் என்று.

இதை கேட்கிற என் காதுகளுக்கு எங்கே சென்று ஈயத்தை ஊத்துவது.

எங்கே சென்று இந்த அவலத்தை முறையிடுவது. கண்டிப்பாக கடவுளிடம் இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!!

Tuesday, November 16, 2010

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...


நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...


தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,


எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!


கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!


பிகு: கண்டிப்பாக இது என் கவிதை இல்லை. ஆனால் இந்த கவிதை எழுதிய கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
சரவணன்.
வித்தியாசமான சில விளம்பரங்களை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பி இருந்தார். அவற்றுள் எனக்கு பிடித்த சில படங்கள்:








எனக்கு ரொம்பப் பிடித்த விளம்பரம் இது!

Monday, November 15, 2010


.

இந்தியாவின் மிகச்சிறந்த கவிதை (மனுஷ்ய புத்திரன்)

 நேற்று நண்பர் ஒருவர் சாருவின் வலை சுட்டியை அளித்து அதில் வெளியிடப்பட்டிருந்த கவிதையை வாசிக்கச் சொன்னார். மனதை அதிர வைத்தது. கடவுள் நம்பிக்கையின் பேரில் சாத்தானுக்கு வேதம் ஓதும் மதவாதிகள் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை. என் வலையில் அதை வெளியிடுவதை பெருமையாகவே நினைக்கிறேன். 


அங்கே கடவுள்கள் பிறப்பதற்கு முன்-  மனுஷ்ய புத்திரன்

அங்கே ஒரு கடவுள் பிறந்தார்
அங்கே ஒரு அரசர்
தனது கடவுளுக்கு ஆலயம் எழுப்பினார்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பு
அரசர்கள் வருவதற்கு முன்பு
அங்கே யார் இருந்தார்கள்
என்பது நமக்குத் தெரியாது
நான் உள்ளுணர்விலிருந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
நம்பிக்கைகளிருந்தல்ல
நம்பிக்கையின்மைகளிலிருந்து
இந்த வரிகளைத் தொடங்குகிறேன்
இதன் அடுத்த வரியைப் பற்றி
எனக்கு எதுவும் தெரியாது
அங்கே ஒரு கோயில் இருந்தது
அங்கே ஒரு மசூதி இருந்தது
கோயில்களும் மசூதிகளும்
எழுப்பப்படுவதற்கு முன்னர்
அவை அழிக்கப்படுவதற்குமுன்னர்
அங்கே ஒரு காலம் இருந்தது
பிறகு அது அழிக்கப்பட்டது
நான் எனது வரலாற்றுப் புத்தகங்களை
எரித்துவிடுகிறேன்
நீங்கள் உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில்
காறித் துப்புங்கள்
நாம் அவற்றை இனி
ஒருபோதும் பயன்படுத்த முடியாது.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பற்றி
சொன்னதுதான் இதற்கும்:
அது ஒரு மூடனால் சொல்லப்பட்ட
புனைகதை
சத்தமும் சினமும் நிறைந்த
அற்பமான புனைகதை
அகழ்வாராய்ச்சிகள்
முக்கியமான தடயங்களைத் தருகின்றன
அவை வரலாறுகளை மாற்றி எழுதுகின்றன
புதிய வரலாறுகளை எழுதுகின்றன
தீர்ப்புகளை எழுதுகின்றன
ஆனால் அதில் ஒரு முக்கியமான
தடயம் மறைக்கப்பட்டுவிட்டது
அது நம் அனைவரையும் மனம்
உடையச் செய்வது
நான் அந்தத் தடயத்தை
இந்த வரிகளுக்குள் ஒளித்து வைக்கிறேன்
நீங்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்
இன்னும் உங்களுக்கு
ஒரு இதயம் இருக்கிறது
ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது
இப்போது அங்கே என்ன  இருக்கிறது?
இடிபாடுகள் இருக்கின்றன
வெற்றிடம் இருக்கிறது
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்கிறார்கள்
கடந்து செல்லும்
பறவைகளின் நிழல்கள் இருக்கின்றன
நீதிபதிகள் நம்பிக்கைகளின் பேரால்
தீர்ப்புகள் வழங்குகிறார்கள்
நீதியின் பெயரால் வழங்கப்படும்
நீதியைவிட
நம்பிக்கையின் பெயரால் வழங்கப்படும்
நீதி நமக்குப் பரிச்சயமானது
நாம் புரிந்துகொள்ளக் கூடியது
நமது அரசர்கள்
நம்பிக்கையின் பெயரால்
நாடுகளை வென்றார்கள்
நம்பிக்கையின் பெயரால்
வெல்லப்பட்டவர்களை
கழுமரங்களில் சொருகிவைத்தார்கள்
மைதானங்களை
சிரத்சேதம் செய்யப்பட்ட தலைகள்
இமைப்பதைப் பார்த்தபடி
தமது நம்பிக்கைகளை உறுதி செய்தார்கள்
ஔரங்கசீப்போ
சத்ரபதி சிவாஜியோ
நம்பிக்கையற்றவர்களாக இருந்திருந்தால்
இவ்வளவு புனித யுத்தங்களை
நாம் பார்த்திருக்க மாட்டோம்
காந்தி ஒரு நம்பிக்கையற்றவராக
இருந்திருந்தால்
இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட
ஒரு விடுதலையை அளித்திருக்க மாட்டார்
ஒரு நீதிபதியை வழிநடத்துவது போல
நம்பிக்கை ஒவ்வொரு மனிதனையும்
இப்போது வழிநடத்துகிறது
அந்த இளைஞனுக்கு என்ன தெரியும்
இஸ்லாத்தின் தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவேயில்லை
ஐந்து நேரமும் தொழுகிறான்
ஒரு சிறிய வேலைக்குப் போகிறான்
அவனது சகோதரிகள் அவனை நம்புகிறார்கள்
ஒரு நாள் காணாமல் போகிறான்
அவனது புகைப்படம்
பத்திரிகைகளில் வெளிவருகிறது
அவன் நம்பிக்கையின் பெயரால்
பிறந்த நாள் விருந்திற்குக் கூடியவர்களைக்
கொலை செய்கிறான்
அந்த சன்னியாசிக்கு என்ன தெரியும்
இந்து தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவே இல்லை
கிடைத்ததை உண்டு
கிடைத்த இடத்தில் தூங்கி
கங்கையில் குளித்து எழுகிறான்
வாளை உயர்த்தி
சூரியனை நோக்கி சந்தியா வந்தனம்
செய்தபடி
நம்பிக்கையின் பெயரால்
யாரோ ஒருத்தியின் வயிற்றைக் கிழிக்கிறான்
எவ்வளவு கொன்றாலும்
ஜனங்கள் மிச்சம் இருக்கிறார்கள்
கூட்டம் கூட்டமாக எல்லா இடத்திலும்
பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்
மனித அழிவு நமக்கு
எந்த அதிர்ச்சியையும் தருவதில்லை
இது ஒரு அலுப்பூட்டும் வேலை
ஏராளமான மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள்
ஏராளமான கோயில்களுடன்
ஏராளமான மசூதிகளுடன்
ஏராளமான நம்பிக்கைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
நம்புங்கள்
நான் ஒரு மத சார்பற்றவன்
நான் நடு நிலையாகவே
கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்
எல்லாத் தரப்பு நியாயங்களையும்
நான் பேசுகிறேன்
நான் அந்த நாடகத்தை ஆடியே தீரவேண்டும்
இந்துவாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
இஸ்லாமியனாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
மத சார்பற்றவனாக இருப்பதும்
ஒரு தேர்வு அல்ல
கடவுள்
அங்கே பிறப்பதற்கு முன்பு
நிறைய மனிதர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள்
கடவுள்களின் ஆலயங்கள்
அங்கே எழுப்பப்படுவதற்கு முன்பு
அது வேட்டைப் பொருள்களைப்
பங்கிட்டுக் கொள்ளும் நிலமாக இருந்தது
அது ரத்த வாடையாலும்
மாமசத்தின் மிச்சங்களாலும் நிறைந்திருந்தது
கருணையின் கடவுள்
தவறான ஒரு இடத்தில் வந்து பிறந்தார்
கருணையே வடிவான இறைவனுக்கு
ஒரு அரசன் தவறான இடத்தில்
ஒரு ஆலயம் எழுப்பினான்
இப்போதும் அந்த இடம்
வேட்டைப் பொருள்களின் பங்கிடும்
நிலமாக  இருக்கிறது
யாரெல்லாம் எதையெல்லாம்
வேட்டையாடினீர்கள்
என்று உங்களுக்குத் தெரியும்
ஒருவர்கூட அதை
பயத்தாலோ
வெட்கத்தாலோ
குற்ற உணர்வாலோ
மறைக்க முயற்சி செய்யவில்லை
நீங்கள் நம்பிக்கையின்
பெயரால் வேட்டையாடினீர்கள்
நீங்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டீர்கள்
நம்பிக்கை என்பதே
எப்போதும் இன்னொருவர்மீதான
தண்டனையாக இருக்கும்போது
நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
மறுமை நாளில்கூட
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
கொஞ்சம்
சமாதான முயற்சிகளில் பங்கெடுங்கள்
கொஞ்சம்
தேர்தல் அறிக்கைகளைத் தாமதியுங்கள்
அது பங்கிடப்படுகிறது
நம்பிக்கையின் தராசில்
உங்கள் வேட்டைப் பொருள் நிறுக்கப்படுகிறது
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
மேல் முறையீடுகளுக்கு நேரமிருக்கிறது
இன்னும் நீதிபதிகள் இருக்கிறார்கள்
கொலைகளுக்கு
இன்னும் எவ்வளவோ அவகாசம் இருக்கிறது
கொல்லப்படுவதற்கு
இன்னும் எவ்வளவோ
ஜனங்கள் இருக்கிறார்கள்
அது பங்கிடப்படுகிறது.